நவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்

நவராத்திரி ஆறாம் நாள் - சந்தானலட்சுமி பாடல்
சந்தான லட்சுமி ———————- ஓம் மாத்ரு ரூபாய் ச வித்மஹே ! பால ஹஸ்தாய தீமஹே ! தன்னோ சந்தான லட்சுமி ப்ரசோதயாத் ! ****************** பல்லவி வந்தனம் சொல்லுங்கடி ! சந்ததி வாழுமடி ! சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே ! (2) சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே !… பிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் ! எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் ! (வந்தனம் சொல்லுங்கடி !) சரணம் – 1 உலகில் உயிர்களையே ஜனனம் செய்பவள் ! சரணம் என்பார்க்குத் துணை ஆனவள் ! (2) சந்தான பாக்கியம்… எனும் சௌபாக்கியம்… தந்திடும் திருமகளும் அவளேயன்றோ ! (2) பிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் ! எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் ! (வந்தனம் சொல்லுங்கடி !) சரணம் – 2 பூரணக் கும்பந்தனை கரங்களில் கொண்டவள் ! பூரணக் குடும்பத்தை தரவல்லவள் ! (2) சாமரம் வீசிடும் தேவியர் சூழவே… தாமரை மலர்உறையும் ஸ்ரீலட்சுமியே ! (2) பிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் ! எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் ! (வந்தனம் சொல்லுங்கடி !)