2019

ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

வடிவம்: புத்தகம் வருடம்: 1990 தொகுப்பு: குத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் மீதான 8 (அந்தாதி) பாடல்கள் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிற வருடம்…எனது அன்னையார் திருமதி. தேவகி அவர்கள் உடல் நலக் குறைவினால், எங்களை விட்டு நீங்கிய கால கட்டம். குத்தாலத்தில், நாங்கள் வசித்து வந்த வீடு அமைந்த வடக்கு வீதியில் வீற்று அருள்பாலித்திருந்த ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் பெயரில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம். எனது தந்தையார் திரு. புருஷோத்தமன் அவர்களின் ஊக்கத்தோடு, நான் எழுதிய பாடல்கள் புத்தக வடிவம் பெற்றதோடு, விநாயகர் சதுர்த்தி விழாவில், திரு. பித்துக்குளி முருகதாஸ்
ஷீரடி சாய் நாதம்

வடிவம்: இசைத் தட்டு (Audio CD) வெளியிட்டோர்: ரமணா விஷன் வருடம்: 2015 இசை: D.V. ரமணி பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் பாடல்கள்: பாண்டுரங்கன் கண்களிலே சாயி ராமாயணம் எங்கோ ஒருவனை அருள் என்னும் தேனூறும் மாவிலை தோரணம் நூல் கொண்ட பொம்மை எல்லாம் வல்ல சிவனே ! சாயி என்றழைத்திடு ! வலி தீர்க்க வரவேண்டும் !
சர்வம் சாயி மயம்

வடிவம்: இசைத் தட்டு (Audio CD) வெளியிட்டோர்: ரமணா விஷன் வருடம்: 2014 இசை: K.S. ரகுநாதன் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் (5 பாடல்கள்) எனது முதல் குறுந்தகடு வெளியீடு…! முதற் பாடலை, திருமதி நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த நண்பர் / கவிஞர் திரு. பி. செந்தில் குமார் அவர்களுக்கும், வெளியிட முன்வந்த ரமணா விஷனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும்….! இந்த CD-யில் 4 பாடல்களை நண்பர் செந்தில்குமாரும், 5 பாடல்களை நானும் எழுதினோம். பாடல்கள்: தீராமல் எரிகின்ற‌ மனமே ! மனமே ! கேட்க…கேட்க மெய்
ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா!

Song tracks available in all leading online music stores Listen Now வடிவம்: இசைத் தட்டு (Audio CD) வருடம்: 2017 இசை: K.R. குருபாத் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் மீதான 8 பாடல்களும், அபார கருணாம் சிந்தும் என்னும் சமஸ்கிருத ஸ்லோகமும், மஹா பெரியவா இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்னும் பாடலின் தமிழ் வடிவமும் கொண்ட குறுந்தகடு. ‘பெரியவா’ என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் மகானுக்கு எனது சமர்ப்பணம். வெளியீடு: 8 – ஜூன் 2017 இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email )
அனுமனின் பலம்

Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) அருள் மழை பொழியும் நிஜந் தானே ! அற்புத மாகிடும் நலம் தானே ! (2) அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) *** இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..   இலங்கையை அதனால் எரித்தானே ! இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..
அகவல் சொன்னால்...

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே ! அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !
சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா ! உனை யின்றி யாரென்னைக் காப்பார் ? “ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே… ஓயாமல் சொல்வேனே பாபா