psdprasad

ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் – ப்ரம்மா, விஷ்ணு சிவனும் வணங்கிடுவார் உனையே ! ஓம் ஜெய அம்பா கௌரி ! ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! – ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! சந்திர முகத் தோற்றம் ! ஓம் ஜெய அம்பா கௌரி ! பொன்நிற மேனியில் சூடுவாய் செந்நிற ஆடையினை…- நல்ல செந்நிற ஆடையினை… மின்னிடும் செம்பவள மாலை – மின்னிடும் செம்பவள மாலை மணிக் கழுத்தில் ஆடும்
சிதம்பராஷ்டகம் - தமிழில்

Youtube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…
ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் - தமிழில்

Youtube link மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…
கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று ! மனதினில் நிதம் உருவேற்று ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! கமல மலரே விழி ! கமல மலரே பதம் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! நாகப் படுக்கையனே ! காமன் தகப்பனே..என் பிறவி
ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

Youtube link மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! சரணம் – 1 ராஜாதி ராஜரும் போற்றிடும் கேசாதி பாதம் தனிலே ரோஜா மலர்கள் சமர்ப்பணம் ! தேவாதி தேவர் பணியும் தெய்வீகப் பாதம்
இன்னிசை பாடி

<a href=”https://www.youtube.com/watch?v=S0BLncg5L-c” target=”_blank” rel=”noopener noreferrer”><u> Youtube link </u></a> இன்னிசை பாடி மனம் மயக்கும் கண்ணனவன் குழலே ! – எங்கள் சாயி நாதன் நாமம் சொல்லி கீதம் பாடுவாய் ! (2) தென்றல் கூத்தாடும் பூந்தோட்டமே ! (2) பாபா புகழ் பாடுவாய் ! பாபா புகழ் பாடுவாய் ! கார் மேகமே …புது நீர் கொண்டு வா ! – அந்த‌ நீரால் சாய் பதங்கள் அதை நீராட்டவா…! (2) சரணம் – 1 —————– தாயாகினான்… நம் குருவாகினான்… – சிவ‌ வடிவாய்…தவ உருவாய் நமைக் காப்பாற்றுவான் ! (2) துனியை எரிக்கின்றவன்…!
பிரதோஷ நந்தியே போற்றி !

சிவனேன்னு அமர்ந்திருப்பான் நந்தியே ! சிவலிங்க ரூபத்தின் முன்பிலே ! சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி … அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! (சிவனேன்னு) காளையவன் கழுத்தினிலே மணி அசையும் – அந்த ஓசையிலே ஓம் எனும் ஒலி இசைக்கும்… வேளையது மூன்றிலுமே அவன் மனமே… நம:சிவாய மந்திரமே ஜபித்திருக்கும்…! (சிவனேன்னு) பார் போற்றும் ப்ரதோஷத்தின் பூஜையிலே…- அவனைப் பார்க்கும் போது ஒளிர்ந்திடுமே தெய்வீகம் ! பார்வதியை பரமனுடன் தாங்கியவன் பாங்குடனே வரும்பொழுது ஆனந்தம்…! (சிவனேன்னு)
ராகு கேது தோஷ பரிகாரத் தலம்

Youtube link ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் ! சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் ! நான்முகனும், சூரியனும் தொழுத தலம் ! தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் ! கோரஸ்: திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! – ராகு கேது தோஷமெலாம் நீக்கிக் காத்திடும் தலம் ! சேஷபுரி ஈஸ்வரனாய் அருளும் ஈசன் ! – அவனை சிவராத்திரியில் தொழும் ஆதிசேஷன் ! தோஷ நிவர்த்தி செய்யும் விசேஷம் ! – வந்து நீராட ஆதிசேஷ புண்ய தீர்த்தம் ! கோரஸ்: திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! –
ஜெய் கணேஷ தேவா - தமிழில்...

Youtube link ஜெய கணேஷ ஜெய கணேஷ ஜெய கணேஷ  தேவா !உன் அம்மை உமாதேவி !அப்பன் மஹாதேவன் ! ஒற்றை தந்தம், நான்கு கரம், தயை புரியும் திருவுளம் ! நெற்றியிலே எழிற் திலகம் ! எலியின் மீது ஊர்வலம் ! வெற்றிலையில் மாலையாம் மலர்களிலே மாலையாம் லட்டுடனே இனிப்புகள்..படைத்திடுவார் பக்தர்கள் ! குருடருக்கும் கண் திறப்பாய் ! குஷ்டருக்கும் நோய் தீர்ப்பாய் ! வேண்டுவோர்க்கு பிள்ளைவரம் செல்வமெலாம் நீ கொடுப்பாய் ! முதலில் உன்னை பூஜைசெய்து அடிபணிந்திடு வோர்க்கு…வளமுடனே வாழ வைப்பாய்தடைகளெலாம் உடைத்து…
மூவுலகின் முதற்கடவுள்

Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! மூவுலகின் முதற்கடவுள் மோகனன் ! மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் ! (தேவர் குலம் காக்க வந்த காவலன் !) தோப்புக்கர்ணம் போடச் சொல்லி… தேவர்கட்கு தொல்லை தந்து… களியாட்டம் ஆடி வந்தான் கஜமுகாசுரன் ! களியாட்டம் ஆடியவன் கதை முடித்து அவனை ஒரு எலியாட்டம் ஆக்கியவன் ஸ்ரீ கஜானனன் ! (தேவர் குலம் காக்க வந்த காவலன் !) அனல் உமிழ்ந்து பேசிப் பேசி, அனைவரையும் நடுங்கவைத்து அளவில்லாத‌ துன்பம் தந்தான் அனலாசுரனே ! அனல் உமிழும் அசுரனையே விழுங்கி