Front Page Display

சிதம்பராஷ்டகம் - தமிழில்

Youtube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…
கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று ! மனதினில் நிதம் உருவேற்று ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! கமல மலரே விழி ! கமல மலரே பதம் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! நாகப் படுக்கையனே ! காமன் தகப்பனே..என் பிறவி
மூவுலகின் முதற்கடவுள்

Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! மூவுலகின் முதற்கடவுள் மோகனன் ! மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் ! (தேவர் குலம் காக்க வந்த காவலன் !) தோப்புக்கர்ணம் போடச் சொல்லி… தேவர்கட்கு தொல்லை தந்து… களியாட்டம் ஆடி வந்தான் கஜமுகாசுரன் ! களியாட்டம் ஆடியவன் கதை முடித்து அவனை ஒரு எலியாட்டம் ஆக்கியவன் ஸ்ரீ கஜானனன் ! (தேவர் குலம் காக்க வந்த காவலன் !) அனல் உமிழ்ந்து பேசிப் பேசி, அனைவரையும் நடுங்கவைத்து அளவில்லாத‌ துன்பம் தந்தான் அனலாசுரனே ! அனல் உமிழும் அசுரனையே விழுங்கி
சாய்நாதனே எந்தன் சாரதி

Youtube link பல்லவி நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த‌ சாய்நாதனே எந்தன் சாரதி ! (2) துணையாகி வருகின்றான் வழிகாட்டி ! – எனை இயக்குகிறான் அருள்பொழியும் விழிகாட்டி !  (2) (நான் நாடி) சரணம் – 1 விழி காக்கும் இமை போல எனைக் காக்கிறான் ! – நன் மொழி பேசி மனதோடு இதம் சேர்க்கிறான் ! (2) கலி தீர்க்கும் குருவாகி…. கலி தீர்க்கும் குருவாகி…ஒளி வீசுவான் ! – புதுக் களிப்பூட்டி என் வாழ்வில் நலம் கூட்டுவான் ! (2) (நான் நாடி) சரணம் – 2 வரச்சொல்லி
கற்பகத்தானைக் கேளுங்க !

Youtube link நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) கோரஸ்: பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன் நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க ! வீட்டில் என்ன செய்யும்போதும்…கேட்பதுவும் யாரைங்க? மூத்தவரை தானுங்க ! ஏதுன்னாலும் கேளுங்க ! மூத்தவரு யாரு? நம்ம,,மூஷிகனே தானுங்க ! (2) கோரஸ்: பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன் நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க ! பிள்ளைச் செல்வம் வேணுமுன்னு…வேண்டிக்கிட்டா போதுங்க ! அருகம்புல்ல போடுங்க ! அர்ச்சனைகள் பண்ணுங்க ! பிள்ளை வரம்
எவ்வளவு சொன்னாலும்...

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை ராகம்: வாசந்தி தாளம்: ஆதி Youtube link பல்லவி ———– எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன் பேரழகை..உந்தன் பேரழகை…! (எவ்வளவு) அனுபல்லவி அவ்வளவு அழகையும் அருகிருந்து… செவ்விதழாள் தாயாரும் பார்த்து நாணுவதை… (எவ்வளவு) சரணம் எவ்விதமாய் பிணி வந்து வாட்டிடினும் பவ்வியமாய் உனை வேண்ட பனிபோல் ஆகும் ! திவ்விய க்ஷேத்திரனே ! வைத்ய ராகவா ! திவ்விய க்ஷேத்திரனே ! வைத்ய ராகவாஉன் மருத்துவ மகத்துவத்தை பாட்டினிலே… (எவ்வளவு)
ஜெய தன்வந்திரி ! ஓம் !

Youtube link மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி மருத்துவ ராஜனாம் தன்வந்திரி ! (2)வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி ! (2) வகுத்திட வந்தான் நாராயண ஹரி ! கோரஸ்:நாராயண ஹரி ! நாராயண ஹரி ! நாராயண ஹரி ! ஓம் !ஜெய தன்வந்திரி !ஜெய தன்வந்திரி ! ஜெய தன்வந்திரி ! ஓம் ! (2) சரணம்————ஆயுர்வேதத்தின் தந்தையாய் வந்தான் !ஆயுளை வளர்க்கும் விந்தையைச் சொன்னான் ! (2)நோய்களை குணமாக்கும் குணவான் அவனே !நலங்களை கொடுக்கும் பகவான் அவனே ! (2) கோரஸ்:நாராயண ஹரி ! நாராயண ஹரி ! நாராயண ஹரி ! ஓம்
அனுமனின் பலம்

Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) அருள் மழை பொழியும் நிஜந் தானே ! அற்புத மாகிடும் நலம் தானே ! (2) அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) *** இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..   இலங்கையை அதனால் எரித்தானே ! இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..
அகவல் சொன்னால்...

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே ! அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !