நவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல்

நவராத்திரி மூன்றம் நாள் - தான்யலட்சுமி பாடல்
தான்ய லட்சுமி ———————– ஓம் க்ஷுத ரூபாய வித்மஹே ! தான்ய வாசாய தீமஹே ! தன்னோ தேவி ப்ரசோதயாத் ! ****************************** பல்லவி வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே ! சரண்புகுந்தோம் உன் பாதம் !! தானிய வகைகள் செழித்திடச் செய்வாய் ! பூமியில் பசுமை பூத்திடச் செய்வாய் ! வளங்களை சேர்த்திடுவாய் ! வறுமையைப் போக்கிடுவாய் ! (2) (வளம்யாவும் ) சரணம் – 1 ஒரு பருக்கை சோற்றாலே பெருமானின் பெரும் பசி ஆற்றியது நீதானே ! (2) ஒருபோதும் குறைவு இலா உணவினை நீதந்து …. உயிர்களும் உய்திடச் செய்திடுவாய் ! சரண்புகுந்தோம் உன் பாதம் ! தானிய வகைகள் செழித்திடச் செய்வாய் ! பூமியில் பசுமை பூத்திடச் செய்வாய் ! வளங்களை சேர்த்திடுவாய் ! வறுமையைப் போக்கிடுவாய் ! சரணம் – 2 பச்சை மால் பரந்தாமன் நாரணனின் பக்க துணை ஆனவளே தான்ய லட்சுமி ! (2) பச்சை உடை பூண்டவளே ! பைந்தமிழ் தேவியே ! பசுமையாய் பூப்பாயோ பூவுலகில்…! சரண்புகுந்தோம் உன் பாதம் ! (தானிய வகைகள்)