ராகு கேது தோஷ பரிகாரத் தலம்

ராகு கேது தோஷ பரிகாரத் தலம்

Youtube link

ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் !
சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் !
நான்முகனும், சூரியனும் தொழுத தலம் !
தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் !

கோரஸ்:
திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! – ராகு
கேது தோஷமெலாம் நீக்கிக் காத்திடும் தலம் !

சேஷபுரி ஈஸ்வரனாய் அருளும் ஈசன் ! – அவனை
சிவராத்திரியில் தொழும் ஆதிசேஷன் !
தோஷ நிவர்த்தி செய்யும் விசேஷம் ! – வந்து
நீராட ஆதிசேஷ புண்ய தீர்த்தம் !

கோரஸ்:
திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! – ராகு
கேது தோஷமெலாம் நீக்கிக் காத்திடும் தலம் !

ராகுபுக்தி கேதுபுக்தி நடப்பார்க்கும் – மண
மாலைகாண தடைகளினைக் காண்பார்க்கும்
கனவினிலே நாகத்தினை பார்ப்போருக்கும்
நினைவினிலே நலம்கொடுக்கும் புண்ணியதலம் !

கோரஸ்:
திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! – ராகு
கேது தோஷமெலாம் நீக்கிக் காத்திடும் தலம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *