பிரதோஷ நந்தியே போற்றி !

சிவனேன்னு அமர்ந்திருப்பான் நந்தியே !
சிவலிங்க ரூபத்தின் முன்பிலே !
சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி …
அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…!
அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…!
(சிவனேன்னு)

காளையவன் கழுத்தினிலே மணி அசையும் – அந்த
ஓசையிலே ஓம் எனும் ஒலி இசைக்கும்…
வேளையது மூன்றிலுமே அவன் மனமே…
நம:சிவாய மந்திரமே ஜபித்திருக்கும்…!

(சிவனேன்னு)

பார் போற்றும் ப்ரதோஷத்தின் பூஜையிலே…- அவனைப்
பார்க்கும் போது ஒளிர்ந்திடுமே தெய்வீகம் !
பார்வதியை பரமனுடன் தாங்கியவன்
பாங்குடனே வரும்பொழுது ஆனந்தம்…!

(சிவனேன்னு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *