மூவுலகின் முதற்கடவுள்

மூவுலகின் முதற்கடவுள்

Youtube link

தேவர் குலம் காக்க வந்த காவலன் !

அசுரர்களை வதமுடித்த நாயகன் !

மூவுலகின் முதற்கடவுள் மோகனன் !

மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)

தோப்புக்கர்ணம் போடச் சொல்லி…

தேவர்கட்கு தொல்லை தந்து…

களியாட்டம் ஆடி வந்தான் கஜமுகாசுரன் !

களியாட்டம் ஆடியவன் கதை முடித்து அவனை ஒரு

எலியாட்டம் ஆக்கியவன் ஸ்ரீ கஜானனன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)

அனல் உமிழ்ந்து பேசிப் பேசி,

அனைவரையும் நடுங்கவைத்து

அளவில்லாத‌ துன்பம் தந்தான் அனலாசுரனே !

அனல் உமிழும் அசுரனையே விழுங்கி

அந்த அனல் குளிர‌

அருகம் புல்லை உண்டவனாம் ஸ்ரீ கஜானனன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)