பிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)

பிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)
Youtube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய அந்தி வேளையில் நான்கரை மணிக்கு நந்தி தேவனின் சன்னதியில்… நம:சிவாய மந்திரம் சொல்லி… சிவனடியார்கள் செய்யும் பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… ஞாயிற்றுக் கிழமை செய்திடும் பூஜை சூரிய தசையின் தோஷம் தீர்க்கும்… பிரிந்தே வாழும் குடும்பம் தன்னை பரிவுடன் மீண்டும் ஒன்றாய் சேர்க்கும் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய திங்கட்கிழமை பிரதோஷ பூஜை சோமவார ப்ரதோஷமாம் ! மனதினில் அமைதி தந்திடும் நிறைவாய் மனக் க்லேசங்கள் நீக்கிடும் முழுதாய் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய செவ்வாய் கிழமை பிரதோஷ பூஜை கவ்விடும் “ருணம்” எனும் கடன்சுமை தீர்க்கும் ! செவ்வாய் தோஷம் தீர்க்கும் அதுவே… ரணமும், ருணமும் தீர்க்கும் பலனே !… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய புதன் கிழமை பிரதோஷ பூஜை புதன் கிரகத்தின் தோஷம் நீக்கும் ஞானம் கூட்டி படிக்காதோரையும் ஞாலம் போற்ற படித்திட வைக்கும் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய லக்னத்தில் குருவை கொண்டோர்க்கெல்லாம் வியாழக் கிழமை பிரதோஷ பூஜை குரு தோஷத்துத் தீமைக் குறைக்கும் ! நலங்களை சேர்த்து வாழ்ந்திட வைக்கும் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய சுக்கிர தசை தான் நடைபெறுவோர்க்கு வெள்ளிக் கிழமை பிரதோஷம் பூஜை உறவுகள் மேலும் வளம்பெற செய்யும் ! செல்வங்களையும் அள்ளிச் சேர்க்கும் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய மஹா ப்ரதோஷம் என்னும் விசேஷம் சனிக்கிழமையின் பிரதோஷமாகும் ! பஞ்சமா பாவங்கள் நீக்கும் ! பரமன் ப்ரதோஷ நாயகன் அருளைச் சேர்க்கும் ! நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய