குருவே தெய்வம் – ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் – தமிழில்

குருவே தெய்வம் - ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் - தமிழில்

குருவின் மகிமைகளைப் பாடும் பிரபலமான பல மராத்தி அபங்கங்களில் “ஆதி குருஸி” எனத் தொடங்கும் “சந்த் துகாராம்” அபங்கத்தின் தமிழாக்கம்.. “குருதான் தெய்வம் என்று எத்தனை முறை சொல்வேன்?” எனப்பாடுகிறார் துகாராம்.

பாடியவர்கள்:
கீர்த்தனா சுப்ரமணியன்
கேதார்நாத் சுப்ரமணியன்

பாடலாசிரியர்: சந்த் துகாராம் (மராத்தி அபங்)
தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
இசை: ஸ்ரீ அருணேஷ் பிரசாத்

Youtube link
பாடல் வரிகள்: (மராத்தி பாடல் – எழுதியவர் : சந்த் ஸ்ரீ துகாராம் – தமிழ் எழுத்தில்)

ஆதி குருஸி பஜாவே !
ரூப் த்யானாஸி ஆனாவே !!

குரு சரணீ டேவிதா பாவ !
தேவ பேடே ஆபோ ஆப !!

குருபாசீ ஆஹே தேவ !
கிதீ ஸாங்கூ வாரம்வார !!

துகா ம்ஹணே குரு பஜனீ !
பேட திலீ நிரஞ்ஜனீ !

தமிழாக்கம்: (பாடலாசிரியர்: ஸ்ரீதேவிபிரசாத்)

குருவை முதலில் போற்றிடு ! – அவர்
உருவை மனதில் ஏற்றிடு !

அன்பாய் குருவடி பணிந்தால் உன்
முன்பாய் இறைவன் வருவாரே !

எத்தனை முறை நான் சொல்வேனோ?
சத்தியம் குருவே தெய்வமென…

குருவை போற்றிடு ஹே துகாராம் !
கடவுள் தானே வருவாராம் !