மஹா பெரியவா திருப்பாதம்

மஹா பெரியவா திருப்பாதம்

Youtube link

பாரதம் முழுவதும் நடந்தளந்த மஹா பெரியவா திருப்பாதம் !
தாமரை போன்ற மலர்பாதம் ! தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !

பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே !
பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் கோடி சேர்த்திடுமே ! (2)

கயிலையை தூக்கிய ராவணனின் ஆணவம் அழுத்திய திருப்பாதம் !
காளையாம் நந்தியின் கொம்பினிடை நாட்டியம் ஆடிய பொற்பாதம் !
முயலகன் என்னும் அறியாமை அதனையும் நசுக்கிடும் திருப்பாதம் !
மார்க்கண் டேயனைக் காத்திடவே காலனை தகர்த்த பொற்பாதம் !

பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே !
பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் கோடி சேர்த்திடுமே ! (2)

மாபலி மன்னனை ஆட்கொண்ட வாமன ராஜனின் திருப்பாதம் !
காளிங்கன் தலையில் ஆடியதால் காத்தவன் கண்ணனின் பொற்பாதம் !
சாபத்தை தீர்த்துக் கல்லினையே அகலிகை ஆக்கிய திருப்பாதம் !
நாராயண கிரியில் வேங்கடவன் முதன்முதல் பதித்த பொற்பாதம் !

பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே !
பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் கோடி சேர்த்திடுமே ! (2)