வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

Youtube link

கந்தன் பிறந்த வி சாகம் ! – விசேஷம் !
அந்த சிறப்புகள் பாடிடும் கானம் !

பாசுபதம் எனுமாயுதம் பார்த்தன்சிவ பெருமானிடம்
பெற்றதும் இந்த நாளே ! – அது
வெற்றியின் வரலாறே !

ஈசன் மழுவினை ஏந்தி – திருநடனம்
மழபாடியில் புரிந்த துஇந்நாளே !

ஹரி நாராயணன் துதிபாடிய ஆழ்வார்களில் நம்மாழ்வார்
பிறந்ததும் இந்த நாளே ! – இந்த
விசாகத் திரு நாளே !

புத்தர் பிறந்ததும் இந்நாளே ! திருநாளே !
அவர் ஞானம் அடைந்ததும் இந்நாளே ! – திரு
ஞானம் பெற்றதும் இந்நாளே !

சத்ய ஞான சபை எனும் ஆலயம் வடலூரில் வள்ளலார்
செய்து திறந்ததும் இந்நாளே ! – இந்த
விசாகத் திருநாளே !