சிவனேன்னு இரு !

சிவனேன்னு இரு !

Youtube Link

சிவனேன்னு இரு மனமே ! – அவன்
சிந்தனையோடு தினமே !  (2)
பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே !
படைத்தவனும் அவனே !

கோரஸ்:
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !

(சிவனேன்னு)

ஒன்பது கோளும் அவன்வசமாகும் !
ஒவ்வொரு நாளும் அவன்செயலாகும் ! (2)
இதையறியாமல் கடலலை போலே…
அலைவதேன் அங்கும்..இங்கும்?

கோரஸ்:
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !

(சிவனேன்னு)

கர்மவினைப் பயன் அவன்கணக்காகும் !
தர்மமும் பாவமும் அவன்முடிவாகும் ! (2)
சர்வமும் சிவனின் சித்தமேயாகும் !
தெளிவடைந்தால் என்றும் இன்பம்…!

கோரஸ்:
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !
ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய !

(சிவனேன்னு)