தைப்பூசம் சிறப்புகள் – பாடல் வடிவில்…

தைப்பூசம் சிறப்புகள் - பாடல் வடிவில்...

பௌர்ணமி தைமாசம்…
சேர்ந்துவரும் தைப்பூசம் !
ரொம்ப விசேஷம் ! அது
ரொம்ப விசேஷம் !
அத பாட்டுலதான்
சொல்லவந்தேன்…
கேட்டுபுட்டு லைக்கு போட்டா
ஆகிடுவேனே நானும்
ரொம்ப சந்தோசம் !

சிவனார் உலகத்தை
படைச்சநாளும் பூசம்தான் !
தைப்பூசம் தான் ! அது
தைப்பூசம் தான் !
வ்யாக்ரபாதர், பதஞ்சலி
முனிவருக்கு அம்மையோடு
நடராஜர் ஆடியதும்
தைப்பூசம் தான் !

முப்புரம் எரிச்சாரே
முக்கண்ணால் பரமேசன்!
தைப்பூசம் தான் ! அன்றும்
தைப்பூசம் தான் !
வடலூரு வள்ளலாரு
சோதியாடு ஐக்கியமா
ஆன அந்த நாளதுவும்
தைப்பூசம் தான் !

இரணிய வர்மனுக்கு
ஈசன் தந்த தரிசனமும்
தைப்பூசம் தான் ! அன்றும்
தைப்பூசம் தான் !
அசுரர்களை அழிச்சிடத்தான்
அன்னையாரு முருகனுக்கு
வேல்கொடுத்த நாளதுவும்
தைப்பூசம் தான் !

பௌர்ணமி தைமாசம்…
சேர்ந்துவரும் தைப்பூசம் !
ரொம்ப விசேஷம் ! அது
ரொம்ப விசேஷம் !
அத பாட்டுலதான்
சொல்லி புட்டேன்..
கேட்டுபுட்டு லைக்கு போட்டா
ஆகிடுவேனே நானும்
ரொம்ப சந்தோசம் !