சாயில்லாமல் நானில்லை !

சாயில்லாமல் நானில்லை !

Youtube link

சாயில்லாமல் நானில்லை !
சாய் குரு போலொரு தெய்வமிலை..(2)
சாயே சத்தியம் சந்தேகமிலை !
சாயே சாஸ்வதம் வேறு இல்லை…
சாயே சாஸ்வதம் வேறு இல்லை…
(சாயில்லாமல்)

சரணம் -1
தாய் உளம் கொண்ட தந்தையவன் !
தயாள குணம் கொண்ட குருவுமவன் ! (2)
ஆயிரம் நாமங்கள் கொண்டவனாம் !
சாயிராம் என்றால் அருள்பவனாம் !

(சாயில்லாமல்)

சரணம் -2
சீரிய வாழ்வினைத் தருபவனாம் !
சகாய குருபரன் சிவ வடிவாம் !
ஷீரடி ஆலயத் திருமகனாம் !
பார் புகழ் பாடிடும் தவமுகனாம் !

(சாயில்லாமல்)