பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே !

பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே !

காலடி தொடங்கி…
பாரதம் முழுவதும்
காலடியாய் நீ சென்றது,,,
பரம ஆச்சர்யமே !
பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே !

(காலடி தொடங்கி)

சரணம் – 1

காவியில் நீயும் நடப்பதைக் கண்டு
சூரியனும் வழி விலகிடுமே !
வானமும் காவியைச் சூடிக்கொண்டு
செவ்வானமாய் மாறிடுமே !

பரம ஆச்சர்யமே !
பரம ஆச்சர்யமே !
பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே !

(காலடி தொடங்கி)

சரணம் -2

பல்லக்கில் உன்னைத் தாங்கிடும் பாக்கியம்
கிட்டுமோ என பலர் காத்திருக்க…

பாதமே போதும் என நடந்தாய்…
ஹர ஹர சங்கர கோஷமுடன்…

பரம ஆச்சர்யமே !
பரம ஆச்சர்யமே !
பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே !

(காலடி தொடங்கி)