காஞ்சி பெரியவா

ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

Youtube link மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! சரணம் – 1 ராஜாதி ராஜரும் போற்றிடும் கேசாதி பாதம் தனிலே ரோஜா மலர்கள் சமர்ப்பணம் ! தேவாதி தேவர் பணியும் தெய்வீகப் பாதம்
மஹா பெரியவா திருப்பாதம்

Youtube link பாரதம் முழுவதும் நடந்தளந்த மஹா பெரியவா திருப்பாதம் ! தாமரை போன்ற மலர்பாதம் ! தஞ்சம் அருளிடும் பொற்பாதம் ! பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே ! பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் கோடி சேர்த்திடுமே ! (2) கயிலையை தூக்கிய ராவணனின் ஆணவம் அழுத்திய திருப்பாதம் ! காளையாம் நந்தியின் கொம்பினிடை நாட்டியம் ஆடிய பொற்பாதம் ! முயலகன் என்னும் அறியாமை அதனையும் நசுக்கிடும் திருப்பாதம் ! மார்க்கண் டேயனைக் காத்திடவே காலனை தகர்த்த பொற்பாதம் ! பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே !
Periyava

என்னைப் பாருங்கோ பெரியவா ! – அருட் கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2) சின்ன பார்வையும் போதுமே ! – பெரும் புண்ணியன் ஆவேன் நானுமே ! (2) (என்னைப்) த்யானம் செய்து பழம் உருட்டி தயை செய்யுங்கோ பெரியவா ! (2) ஞானம், செல்வம், ஆரோக்யம் – அந்த நொடியில்  சேர்ந்திடும் அல்லவா ! (என்னைப்) மட்டைத் தேங்காய் கரம் எடுத்து ஆசி கொடுங்கோ பெரியவா ! (2) மங்கலம் யாவும் வாசல்வந்து வந்தனம் சொல்லும் அல்லவா ! (என்னைப்)
வாங்கோ பெரியவா !

கலிமுற்றிப் போனதுன்னு… ஊருக்குள்ள பேசிக்கிறா ! களிப்புடன் வாழவில்லை.. கஷ்டத்துல தவிக்கிறா !
சத்யம் சிவம் பெரியவா

Youtube–ல் பார்க்க‌… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் ! குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக ! சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் ! மந்திரமாய் ‘ஹர ஹர சங்கர’ சொன்னான் ! சத்யம் சிவம் பெரியவா ! சத்யம் சிவம் பெரியவா ! திருநீறு நிறைகின்ற‌ திருமேனி கொண்டான் ! திருத்தண்டம் கரமேந்தும் சூலமாய்க் கொண்டான் ! காவிஉடை சூடிஅவன் காஞ்சிநகர் வந்தான் ! பாவியர்க்கும் பதமலரில் நற்கதியே தந்தான் ! சத்யம் சிவம் பெரியவா ! சத்யம் சிவம் பெரியவா ! இமயம்முதல் குமரிவரை காலடியாய் சென்றான் ! சமய, மத தத்துவங்கள் சகலருக்கும் சொன்னான்
வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா !

பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர சேகரா ! தயாபரா ! (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் – 1 நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…! வாய்மொழி சொல் கேட்டு அறிவதே வேதம் ! ப்ரபஞ்சம் முழுவதும்…வேதத்தின் த்வனி பரவ… சகல சௌபாக்யம் வரும் என்றருள் மலர்ந்தாய் ! சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா ! (வேதமே உலகின்) (வேதமே) சரணம் -2 ஞானத்தை வளர்க்கும் அமுதமே வேதமாம் ! ஞாலத்தில் ஒலித்திருக்கும் என்றுமே நாதமாய் ! வேதமே ஓதாத…ஆலயம் தன்னில்… தேவன் வாழ்வதில்லை…!
பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே !

காலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் – 1 காவியில் நீயும் நடப்பதைக் கண்டு சூரியனும் வழி விலகிடுமே ! வானமும் காவியைச் சூடிக்கொண்டு செவ்வானமாய் மாறிடுமே ! பரம ஆச்சர்யமே ! பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் -2 பல்லக்கில் உன்னைத் தாங்கிடும் பாக்கியம் கிட்டுமோ என பலர் காத்திருக்க… பாதமே போதும் என நடந்தாய்… ஹர ஹர சங்கர கோஷமுடன்… பரம ஆச்சர்யமே ! பரம ஆச்சர்யமே
சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன்