ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

Youtube link

மணம் வீசும் மலர்களால்
மஹா பெரியவா அர்ச்சனை !
மனம் எங்கும் என்றுமே
மகான் அவரின் சிந்தனை !

கோரஸ்:
சங்கரா ! ஜெய சங்கரா !
சங்கரா ! ஹர சங்கரா !
மணம் வீசும் மலர்களால்
மஹா பெரியவா அர்ச்சனை !
மனம் எங்கும் என்றுமே
மகான் அவரின் சிந்தனை !

கோரஸ்:
சங்கரா ! ஜெய சங்கரா !
சங்கரா ! ஹர சங்கரா !
சரணம் – 1

ராஜாதி ராஜரும் போற்றிடும்
கேசாதி பாதம் தனிலே
ரோஜா மலர்கள் சமர்ப்பணம் !
தேவாதி தேவர் பணியும்
தெய்வீகப் பாதம் தனிலே
தாமரை மலர்கள் சமர்ப்பணம் !

வில்வம் தரிக்கும் சிரத்திலே
விருட்சி பூக்கள் சமர்ப்பணம் ! (2)
செல்வம் அருளும் கரத்திலே
செண்பகப் பூக்கள் சமர்ப்பணம் !

கோரஸ்:
சங்கரா ! ஜெய சங்கரா !
சங்கரா ! ஹர சங்கரா !

மணம் வீசும் மலர்களால்
மஹா பெரியவா அர்ச்சனை !
மனம் எங்கும் என்றுமே
மகான் அவரின் சிந்தனை !

சரணம் – 2

காவியைச் சூடும் காவியன்
காந்தமாம் விழிகள் ரெண்டிற்கும்
குவளை மலர்கள் சமர்ப்பணம் !

பூசிய திருநீறு தாங்கிடும்
புண்ணிய நெற்றிக்கு மென்மையாய்
புன்னை மலர்கள் சமர்ப்பணம் !

கருணைக் கடலின் மனதிற்கு
அலரிப் பூக்கள் சமர்ப்பணம் ! (2)
குருவாய் வந்த சிவனுக்கு
கொன்றை பூக்கள் சமர்ப்பணம் !

கோரஸ்:
சங்கரா ! ஜெய சங்கரா !
சங்கரா ! ஹர சங்கரா !

மணம் வீசும் மலர்களால்
மஹா பெரியவா அர்ச்சனை !
மனம் எங்கும் என்றுமே
மகான் அவரின் சிந்தனை !

கோரஸ்:
சங்கரா ! ஜெய சங்கரா !
சங்கரா ! ஹர சங்கரா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *