ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா !
ஜெய சரஸ்வதி தாயே !
மூவுலகாள்பவள் நீயே ! – இந்த
மூவுலகாள்பவள் நீயே !
நற்குணத் திருவுருவே !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
கமலத்தில் நிலவுபோல் அமர்ந்தவள் !
மங்கல வடிவினளே ! – முழு
மங்கல வடிவினளே !
அழகிய அன்னம் உன்வாகனம்
அழகிய அன்னம் உன்வாகனம்
ஈடிலா எழிற்கோலம் !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
வீணையும் மாலையும் கரங்களில்
ஏந்திடும் கலைமகளே ! – அம்மா !
ஏந்திடும் கலைமகளே !
ரத்தின மகுடம் உன்சிரத்தில் – ஒளிர்
ரத்தின மகுடம் உன்சிரத்தில்
முத்தாரம் கழுத்தில்…!
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
அன்புடன் அருளிடும் தேவிநீ
தஞ்சமாய் வந்தவர்க்கு – உனைத்
தஞ்சமாய் வந்தவர்க்கு…!
மந்திரை மூலமாய் ராவணன் – அந்த
மந்திரை மூலமாய் ராவணன்
வதமுடித்தாய் நீயே !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
ஒளிர்ந்திடும் ஞானத்தை அருளுவாய் !
ஞானத்தைத் தருபவளே ! – மெய்
ஞானத்தைத் தருபவளே !
மோகம், பேராசை, அஞ்ஞானம் – தீய
மோகம், பேராசை, அஞ்ஞானம்
ஜகத்தினில் விலக்கிடுவாய் !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
தூபமும், தீபமும், பழங்களும்
படைத்தேன் ஏற்றிடுவாய் ! – அம்மா
படைத்தேன் ஏற்றிடுவாய் !
எங்களின் அறிவுக்கண் திறந்து – அம்மா
எங்களின் அறிவுக்கண் திறந்து
அகிலத்தில் ஒளிசேர்ப்பாய் !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
சரஸ்வதி தாயுந்தன் ஆரத்தி
பாடிடுவோர்கள் எல்லாம் – தினம்
பாடிடுவோர்கள் எல்லாம்
கல்வியும், நலங்களும் பெறுவார் – நல்ல
கல்வியும், நலங்களும் பெறுவார்..
பக்தியும் கூடிடவே
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !
ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா !
ஜெய சரஸ்வதி தாயே !
மூவுலகாள்பவள் நீயே ! – இந்த
மூவுலகாள்பவள் நீயே !
நற்குணத் திருவுருவே !
ஓம் ஜெய சரஸ்வதி தாயே !