ஸ்ரீ துர்க்கா ஆரத்தி – தமிழில்

ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link

மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்

பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன்
—————————————
ஜெய அம்பா கௌரி ! அம்மா !
ஜெய ஷ்யாம கௌரி !
ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் –
ப்ரம்மா, விஷ்ணு சிவனும்
வணங்கிடுவார் உனையே !
ஓம் ஜெய அம்பா கௌரி !


ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! –
ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் !
சந்திர முகத் தோற்றம் !
ஓம் ஜெய அம்பா கௌரி !

பொன்நிற மேனியில் சூடுவாய்
செந்நிற ஆடையினை…- நல்ல
செந்நிற ஆடையினை…
மின்னிடும் செம்பவள மாலை –
மின்னிடும் செம்பவள மாலை
மணிக் கழுத்தில் ஆடும் !
ஓம் ஜெய அம்பா கௌரி !

கரத்தினில் கட்கம், கபாலம்
வாகனமாய் வரும் சிம்மம் – உன்
வாகனமாய் வரும் சிம்மம்
தேவர், மானிடர் தொழுவார் – முனி
தேவர், மானிடர் தொழுவார்
அவர்துயர் நீ துடைப்பாய் !
ஓம் ஜெய அம்பா கௌரி !

செவிகளில் ஆடிடும் குண்டலம்
மூக்கினில் முத்து மின்னும் ! – உன்
மூக்கினில் முத்து மின்னும் !
கோடி சூர்யசந்திர னாக
கோடி சூர்யசந்திர னாக
உன் உரு ஜொலித்திருக்கும் !

ஓம் ஜெய அம்பா கௌரி !

சும்ப நிசும்பனை வென்றவள்
மஹிஷா சுர மர்த்தினி ! – நீ
மஹிஷா சுர மர்த்தினி !
தூம்ர லோசனை வதைத்தாய் ! – நீ
தூம்ர லோசனை வதைத்தாய் !
உக்கிர கோலத்திலே…
ஓம் ஜெய அம்பா கௌரி !

நான்முகன், ஈஸ்வரன், விஷ்ணுவாம்
மூவரின் துணை நீயே – அம்மா !
மூவரின் துணை நீயே !
ஆகமம், வேதங்கள் சொல்லும் – உனை
ஆகமம், வேதங்கள் சொல்லும்
ஈசனின் ராணியென்றே…
ஓம் ஜெய அம்பா கௌரி !

அறுபத்து நான்கு யோகினியர்
உன்புகழ் தனைப் பாட – அம்மா
உன்புகழ் தனைப் பாட…
டமருகம் தாளமிசைக்க..உடன்
டமருகம் தாள மிசைக்க
பைரவர் ஆடிடுவார் !
ஓம் ஜெய அம்பா கௌரி !

ஜகமிதைக் காத்திடும் தாயே !
நலமெல்லாம் தருபவளே – சுக
நலமெல்லாம் தருபவளே !
பக்தரின் இன்னல்கள் தீர்த்து – உன்
பக்தரின் இன்னல்கள் தீர்த்து…
அருள்மழை பொழிபவளே !
ஓம் ஜெய அம்பா கௌரி !

வரம்தரும் முத்திரை காட்டிடும்
நாற்கரம் எழிற்கோலம் – உன்
நாற்கரம் எழிற்கோலம் !
மனதால் உனைப்பணிவோர்க்கு – உள்
மனதால் உனைப்பணிவோர்க்கு
பலன்களைத் தருபவளே !
ஓம் ஜெய அம்பா கௌரி !

சூடம், அகர்பத்தி ஆரத்தி
தங்க தட்டினிலே – மின்னும்
தங்க தட்டினிலே ..!
ஆரத்தி செய்திடும்போது – உனக்
ஆரத்தி செய்திடும்போது
நெற்றியில் ஒளிஜோதி !
ஓம் ஜெய அம்பா கௌரி !