ஸ்ரீ லட்சுமி ஆரத்தி – தமிழில்

ஸ்ரீ லட்சுமி ஆரத்தி - தமிழில்

Youtube link

மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
பாடியவர்: பத்மஜா
இசை: கரோகி (இணையம்)
ஓம் ஜெய லட்சுமி தாயே ! அம்மா ஜெய லட்சுமி தாயே !
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
தினம்  தொழுவார் உனையே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

ஓம் ஜெய லட்சுமி தாயே !
அம்மா ஜெய லட்சுமி தாயே !
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
தினம்  தொழுவார் உனையே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

கலைமகள், மலைமகள், திருமகள்
ஜகமதன் தாய் நீயே !
இந்த ஜகமதன் தாய் நீயே !
சூரிய, சந்திரர் பணிவார் !
சூரிய, சந்திரர் பணிவார் !
நாரதர் துதி இசைப்பார் !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

வளங்களும் , இன்பமும் அருளிடும்
ஸ்ரீ துர்க்கா நீயே !
அம்மா ஸ்ரீ துர்க்கா நீயே !
ஒருமனதாகிப் பணிவார்
உனை ஒருமனதாகிப் பணிவார்
சௌபாக்யம் பெறுவார் !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

ஆழ் அடி உலகினில் உறைபவள் !
ஆசிகள் தரும் தாயே !
நல் ஆசிகள் தரும் தாயே !
கர்ம வினைக்கொளி காட்டி…
கர்ம வினைக்கொளி காட்டி…
அகிலத்தைக் காப்பாயே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

நீ வந்து வாழ்ந்திடும் வீட்டினில்
நலங்கள் எலாம் சேரும் !
அம்மா ! நலங்கள் எலாம் சேரும் !
முடியாதென்பதும் முடியும்
முடியாதென்பதும் முடியும்
மனதினில் பயம் மடியும் !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

யாகங்கள் நீயின்றி ஆகுமோ?
போகங்களும் வருமோ?
உடை போகங்களும் வருமோ?
உன்னிடம் இருந்தே வாழ்வின்
உன்னிடம் இருந்தே வாழ்வின்
பாக்கியம் யாம் பெறுவோம் !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

நலங்களின் ஆலயம் ஆகிய
பாற்கடல் திரு மகளே !
அம்மா ! பாற்கடல் திரு மகளே !
யாருக்கும் கிடைக்கா தரிய…
யாருக்கும் கிடைக்கா தரிய…
ஏழிரு ரத்தினமே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

மஹாலட்சுமி ஆரத்தி படிப்பவர்
ஆனந்தம் கொள்வார்
பேரானந்தம் கொள்வார் !
பாவங்கள் எல்லாம் தீர்ப்பார் !
தன் பாவங்கள் எல்லாம் தீர்ப்பார் !
பாக்யமெலாம் பெறுவார் !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

ஓம் ஜெய லட்சுமி தாயே !
அம்மா ஜெய லட்சுமி தாயே !
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
தினம்  தொழுவார் உனையே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !

ஓம் ஜெய லட்சுமி தாயே !
அம்மா ஜெய லட்சுமி தாயே !
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
பிரம்மா, விஷ்ணுவும், சிவனும்,
தினம்  தொழுவார் உனையே !
ஓம் ஜெய லட்சுமி தாயே !