சாய்நாதனே எந்தன் சாரதி

சாய்நாதனே எந்தன் சாரதி

Youtube link

பல்லவி

நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த‌
சாய்நாதனே எந்தன் சாரதி ! (2)

துணையாகி வருகின்றான் வழிகாட்டி ! – எனை
இயக்குகிறான் அருள்பொழியும் விழிகாட்டி !  (2)

(நான் நாடி)

சரணம் – 1

விழி காக்கும் இமை போல எனைக் காக்கிறான் ! – நன்
மொழி பேசி மனதோடு இதம் சேர்க்கிறான் ! (2)

கலி தீர்க்கும் குருவாகி….
கலி தீர்க்கும் குருவாகி…ஒளி வீசுவான் ! – புதுக்
களிப்பூட்டி என் வாழ்வில் நலம் கூட்டுவான் ! (2)
(நான் நாடி)

சரணம் – 2

வரச்சொல்லி அழைத்தானே அவன் ஆலயம் ! – அவன்
வரவேற்கும் பொருளானேன்…என் பாக்கியம் ! (2)

வரம் தந்து அன்போடு….
வரம் தந்து அன்போடு…அவன் தரிசனம் – அதைத்
தந்தானே நான் செய்த‌ பெரும் புண்ணியம் !  (2)

(நான் நாடி)