விட்டல விட்டல சாய் !

விட்டல விட்டல சாய் !

Youtube Link

இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே…
பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே !
கால் மேலே கால் போட்டு அமர்ந்த கோலம் கண்டேனே
ஷீரடி தலத்திலே ! ஷீரடி தலத்திலே !

பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !
பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !

சரணம் – 1
*****************
அங்கு நின்ற களைப்பாற இங்கு வந்து அமர்ந்தாயோ?
இங்கமர்ந்த இளைப்பாற அங்கு சென்று நின்றாயோ? (2)

மின்னும் உந்தன் கண்ணொளி…
எங்களுக்கு சொல்லுதே…
விட்டலனே சாயி என..சாயே விட்டலன் என…

பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !
பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !

சரணம் – 2
*****************
விட்டலனாய் புதன்கிழமை புனிதம் என்று கொண்டாயே !
சத்யகுரு சாயியாக குருவாரம் கொண்டாயே !

விஷ்ணுவின் சஹஸ்ர நாமம்
சொல்லச் சொன்ன பாபாவே !
விட்டலனே விஷ்ணுதான் ! சாயே விட்டலன் தான் !

பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !
பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !