saibaba

இன்னிசை பாடி

<a href=”https://www.youtube.com/watch?v=S0BLncg5L-c” target=”_blank” rel=”noopener noreferrer”><u> Youtube link </u></a> இன்னிசை பாடி மனம் மயக்கும் கண்ணனவன் குழலே ! – எங்கள் சாயி நாதன் நாமம் சொல்லி கீதம் பாடுவாய் ! (2) தென்றல் கூத்தாடும் பூந்தோட்டமே ! (2) பாபா புகழ் பாடுவாய் ! பாபா புகழ் பாடுவாய் ! கார் மேகமே …புது நீர் கொண்டு வா ! – அந்த‌ நீரால் சாய் பதங்கள் அதை நீராட்டவா…! (2) சரணம் – 1 —————– தாயாகினான்… நம் குருவாகினான்… – சிவ‌ வடிவாய்…தவ உருவாய் நமைக் காப்பாற்றுவான் ! (2) துனியை எரிக்கின்றவன்…!
விட்டல விட்டல சாய் !

Youtube Link இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே… பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே ! கால் மேலே கால் போட்டு அமர்ந்த கோலம் கண்டேனே ஷீரடி தலத்திலே ! ஷீரடி தலத்திலே ! பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் ! பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் ! சரணம் – 1 ***************** அங்கு நின்ற களைப்பாற இங்கு வந்து அமர்ந்தாயோ? இங்கமர்ந்த இளைப்பாற அங்கு சென்று நின்றாயோ? (2) மின்னும் உந்தன் கண்ணொளி… எங்களுக்கு சொல்லுதே… விட்டலனே சாயி என..சாயே விட்டலன் என… பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய்
ஸ்ரீ சாய் ராமஜெயம் !

Youtube link ஏது எனக்கு பயம்? – சாய் பாபா தருவார் அபயம் ! பெற்றதெலாம் சாய் உபயம் – -நான் பெற்றதெலாம் சாய் உபயம் வாழ்வே சாயி மயம் – ஜெய் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ! (2) “ஓம் சாய்” ஜபம் செயும் என் மனம்… தினம் தினம் ! அனுதினமே ! சாயி..திருப்பதம் துணைவருமே ! தாயெனை மறந்திடும் போதும் சாயினை நான் மறவேனே…! மறவேன் ஒரு கணமே ! – எனைக் காத்திடும் சாய் சரணே ! (2) வேண்டிடும் யாவையும் அடைந்திலன் எனும் நிலை வந்திடினும்… அது..என்பிழை என்பேனே !
(மறு) அவதாரம் எடுத்து வா சாயி !

Youtube Link   ஸ்ரீ வைத்யநாத சாய் கீர்த்தனை ———————————- ராகம்:கமாஸ் தாளம்: ஆதி ———— பல்லவி ———— அவதாரம் எடுத்து வா சாயி ! – மறு அவதாரம் எடுத்து வா சாயி ! அவனியைக் காக்க, அல்லல்கள் தீர்க்க… (அவதாரம்) அனுபல்லவி ————— சிவ(ன்)தாரம் அம்பிகையைப் போலே தாராள கருணை உளம் கொண்டவன் நீயே ! (அவதாரம்) சரணம் ———- பிணி வந்து பயம்காட்டும் போது… உனையின்றி எமக்கபயம் தந்திடுவார் ஏது? (2) ஸ்ரீ வைத்யநாத சாய் ! தன்வந்திரி பாபா ! வையகம் காத்திடவே,  தருணம் இது வா வா ! (அவதாரம்)
சாயில்லாமல் நானில்லை !

Youtube link சாயில்லாமல் நானில்லை ! சாய் குரு போலொரு தெய்வமிலை..(2) சாயே சத்தியம் சந்தேகமிலை ! சாயே சாஸ்வதம் வேறு இல்லை… சாயே சாஸ்வதம் வேறு இல்லை… (சாயில்லாமல்) சரணம் -1 தாய் உளம் கொண்ட தந்தையவன் ! தயாள குணம் கொண்ட குருவுமவன் ! (2) ஆயிரம் நாமங்கள் கொண்டவனாம் ! சாயிராம் என்றால் அருள்பவனாம் ! (சாயில்லாமல்) சரணம் -2 சீரிய வாழ்வினைத் தருபவனாம் ! சகாய குருபரன் சிவ வடிவாம் ! ஷீரடி ஆலயத் திருமகனாம் ! பார் புகழ் பாடிடும் தவமுகனாம் ! (சாயில்லாமல்)
சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா ! உனை யின்றி யாரென்னைக் காப்பார் ? “ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே… ஓயாமல் சொல்வேனே பாபா
சாயி சரஸ்வதி !

சாயி சரஸ்வதி ! உந்தன் சன்னதி ! அளிக்கும் நிம்மதி ! வேறெங்கும் ஏதடி? துனியில் வரும்உதி! மாற்றிடும் விதி ! மண்ணில் சொர்க்கமாம் நீ வாழும் ஷீரடி! சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா! வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா ! அன்னதானமாய் செய்ய சொன்னவள்! என்ன வேண்டினும் எளிதில் தருபவள்! அன்னை வடிவமாய் என்னை காப்பவள்! அன்பின் ஆலயம் அவள் வாழும் ஷீரடி! சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா! வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா ! கல்விச் செல்வத்தை அள்ளித் தருபவள்! கலைகள் யாவையும் கனிந்து