சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

Youtube link

சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன்
தாள் பணிந்தோமே ஸ்வாமி ! (2)
யோக நிலையிலே..உன் திருக்கோலம்…
யோகம் அருளுமே ஸ்வாமி.. (2)

கோரஸ்:
நரஹரி நரஹரி சரணம்..!
நாராயணனே சரணம் !
(சோளிங்கர்)

சரணம் – 1
சுப வெள்ளிக் கிழமையில் திருமஞ்சனம் ! – அதில்
ஜொலித்திடுமே உன் திரு வதனம்..! (2)

பிணிகளை விலக்கி, ஆயுளை வளர்க்கும்
கோயிலின் புண்ணிய குளதீர்த்தம் ! (2) – ஒரு
கடிகையே தலத்தில் இருந்தாலும்
திருக்கடிகை தருமே நல் மோட்சம் !

கோரஸ்:
நரஹரி நரஹரி சரணம்..!
நாராயணனே சரணம் !
(சோளிங்கர்)

சரணம் – 2
கல்கண்டு, வெல்லமும் நைவேத்யம்..! – அதை
அன்புடன் படைத்திட நலம் சேரும் ! (2)

திருமங்கை ஆழ்வார் பாசுரம் படித்த‌
திருமறை தேவனின் திருத்தோற்றம் ! (2) – அவன்
திருவருள் வேண்டி தினம் தினம் கூடும்…
திருமால் அடியார் திருக் கூட்டம்..!

கோரஸ்:
நரஹரி நரஹரி சரணம்..!
நாராயணனே சரணம் !
(சோளிங்கர்)