ஸ்ரீ சாய் ராமஜெயம் !

ஸ்ரீ சாய் ராமஜெயம் !

Youtube link

ஏது எனக்கு பயம்? – சாய்
பாபா தருவார் அபயம் !
பெற்றதெலாம் சாய் உபயம் – -நான்
பெற்றதெலாம் சாய் உபயம்
வாழ்வே சாயி மயம் – ஜெய்
ஸ்ரீ சாய் ராம ஜெயம் ! (2)

“ஓம் சாய்” ஜபம் செயும் என் மனம்…
தினம் தினம் ! அனுதினமே !
சாயி..திருப்பதம் துணைவருமே !
தாயெனை மறந்திடும் போதும்
சாயினை நான் மறவேனே…!

மறவேன் ஒரு கணமே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே ! (2)

வேண்டிடும் யாவையும் அடைந்திலன்
எனும் நிலை வந்திடினும்…
அது..என்பிழை என்பேனே !
சாயி முகம் கண்ட போதே
தேவைகள் தீர்ந்திடும் உடனே !
நிறையும் உள்ளமுமே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே !

சாய்குரு லீலைகள் பாடிடும்…
சரித்திரம்…சத்சரிதம்…!
ஷீரடி சாயருள் புதுவேதம்..!
படிப்பேன் ! படிப்பேன் தினமே !
புதுப் புது அனுபவம் தருமே !
அதுவும் அதிசயமே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே !

சாம்பலாய் ஆகிடும்
தேகத்தைக்
காத்திடும் சாம்பலதே !
சாயி..அருளிடும் உதியதுவே !
இடுவேன்..இடுவேன் நீறாய்…
பிணிகளைக் களையும் வேராய் !
கவசம் ஆகிடுமே ! – எனைக்
காத்திடும் சாய் சரணே !

ராம் ! ராம் ! ஓம் சாயி ராம் ! – ஜெய
ஓம் சாய் ஸ்ரீ சாயி ராம் !
சத்குரு ஸ்ரீ ஜெய் சாய்ராம் !
ஷீரடி ஓம் சாய்ராம் ! – ஹரி
ஓம் ஜெய் ஸ்ரீ சாய்ராம் ! – ஹரி
ஓம் ஜெய் ஸ்ரீ சாய்ராம் !