saibhajan

சாயில்லாமல் நானில்லை !

Youtube link சாயில்லாமல் நானில்லை ! சாய் குரு போலொரு தெய்வமிலை..(2) சாயே சத்தியம் சந்தேகமிலை ! சாயே சாஸ்வதம் வேறு இல்லை… சாயே சாஸ்வதம் வேறு இல்லை… (சாயில்லாமல்) சரணம் -1 தாய் உளம் கொண்ட தந்தையவன் ! தயாள குணம் கொண்ட குருவுமவன் ! (2) ஆயிரம் நாமங்கள் கொண்டவனாம் ! சாயிராம் என்றால் அருள்பவனாம் ! (சாயில்லாமல்) சரணம் -2 சீரிய வாழ்வினைத் தருபவனாம் ! சகாய குருபரன் சிவ வடிவாம் ! ஷீரடி ஆலயத் திருமகனாம் ! பார் புகழ் பாடிடும் தவமுகனாம் ! (சாயில்லாமல்)
சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா ! உனை யின்றி யாரென்னைக் காப்பார் ? “ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே… ஓயாமல் சொல்வேனே பாபா