சௌக்கீதார் பாபா !

சௌக்கீதார் பாபா !

Youtube-ல் கேட்க…

நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ! (2)
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா (2)

(நீயே என்)

முன் ஜென்ம வினையெல்லாம்
உன் முன்னே கரைந்தோடும்
என்றுந்தன் சன்னதியில் தொழுவேன்! (2)

உன் அன்புக் கடல்தன்னில்
கரையாத கல்லா நான்?
ஏன் என்று தெரியாமல் அழுதேன் ! (2)

(நீயே என்)

நோய் என்றால் நீ தந்த
உதியே என்மருந்தாகும் !
சாய் என்ற உன் பேரே விருந்தாகும் ! (2)
தாய் என்று உனைக் கண்டேன்…
தயை செய்து வழிகாட்டு…
சேய் நானும் வேறெங்கு செல்வேன்? (2)