நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்

நவராத்திரி முதல் நாள் - ஆதிலெட்சுமி பாடல்

ஆதி லட்சுமி
===================
ஓம் மஹா தேவ்யா ச வித்மஹே !
மஹா ஷக்த்யா ச தீமஹே !
தன்னோ ஆதி லட்சுமி ப்ரசோதயாத் !

*************************

பல்லவி
வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே ! (2)

தாமரைப் பூவில் உறைபவளே ! –
செந் தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !

ஸ்ரீமன் நாரணன் மார்பினில் வாழும் ஸ்ரீ ஜகதீஸ்வரியே !
க்ஷேமங்கள் எல்லாம் சேர்த்திடும் தேவி ஸ்ரீ பரமேஸ்வரியே ! (2)
(வைகறையது)

சரணம் – 1
அபயம் வரதம் அளிப்பவளே !
அண்ட சராசரத் தலைமகளே ! (2)

வெண்கொடி ஏந்தும் திருமகளே!
வேண்டிடும் வரம் தருபவளே !
சந்திரன் அவன் சோதரியே !
வந்தெமை நீயும் ஆதரியே !

ஸ்ரீமன் நாரணன் மார்பினில் வாழும் ஸ்ரீ ஜகதீஸ்வரியே !
க்ஷேமங்கள் எல்லாம் சேர்த்திடும் தேவி ஸ்ரீ பரமேஸ்வரியே ! (2)
(வைகறையது)
சரணம் – 2

திருப் பாற்கடலில் பிறந்தவளே !
திருமால் துணையாய் சிறந்தவளே ! (2)

பாரெலாம் போற்றும் பார்கவியே !
பார்த்திடு நீஎனை ஈஸ்வரியே !
சீரெல்லாம் சேர்க்கும் மாதவியே !
நாடுவேன் என்றும் உன்னடியே ! (ஸ்ரீமன் நாரணன்)