ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…

ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை - பாடலாக...
Youtube –ல்  கேட்க… ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா ! மஹாலட்சுமியே சரணமம்மா ! வரலட்சுமி விரதம் வந்த கதையினை பாடிட வந்தோம் கேளம்மா ! (2) சாருமதி என்னும் நற்குணத்தாள் ! சான்றோர் போற்றிய சத்குணத்தாள் ! (2) கணவரை, அவரைப் பெற்றோரை.. கனிவுடன் பாலனம் செய்துவர… மனமுவந்தே அவள் கனவினிலே மஹா லட்சுமியும் எழுந்தருளி… (2) வரலட்சுமி நோன்பினை அனுக்ரஹிக்க… அவளும் பக்தியாய் அனுஷ்டிக்க… செல்வமும் சேர்ந்திட துன்பமும் தீர்ந்திட… சகல நலன்களும் கைகூட…(2) நல்லவள் அவளும் தானடைந்த பலன்களைப் மற்றவர் அடைந்திடவே… நோன்பின் மாண்பினைப் பகிர்ந்தாளே ! கேட்டுச் செய்தவர் செழித்தாரே !… (ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா)