ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ‌
கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2)
பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம‌
சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !

(ஆடி மாசம்)

வேண்டிகிட்டு சூடி வரார் வேப்பில ஆடை !
வாட்டுகிற வேதனைகள் எல்லாம் தீர…
நேர்ந்துகிட்டு நடந்து வரார் தீயின் மேல…
தீய்ஞ்சுபோகும் வாழ்வில் இனி துன்பமே இல்ல…

(ஆடி மாசம்)

பொங்க(ல்) வெச்சு படைச்சிடுவார் அம்மனுக்காக..!
பொழுதெல்லாம் “ஆத்தா வா !”-ன்னு கூப்பிடுவாக !
காவடிகள் தூக்கிவந்து ஆடிடுவாங்க !
மாரியம்மன் பாட்டெடுத்து பாடிடுவாங்க !

(ஆடி மாசம்)