கல் கருடன் ! – கருட பஞ்சமி

கல் கருடன் ! - கருட பஞ்சமி

கல் கருடன் ! கருணா சாகரன் !
புள்ளரசன் ! நாரணன் சாதகன் !

உள்ளக் குறை தீர்த்திடுவான் !
வள்ளலென வரம் தருவான் !

திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !

(கல் கருடன்)

உச்சி கால நிவேதனம்
பட்சியாய் வந்து ஏற்பான் !

சத்தியம் என வந்தவரை…
நிச்சயமாய்க் காப்பான் !

தாங்கிடுவேன் கையிலெனும் கோலத்திலே இருப்பான் !
பாங்குடனே பணிந்தவற்குத் துணையுமாகி இருப்பான் !

(கல் கருடன்)

ஆடிமாத பஞ்சமியில்
அவதரித்த சீலன் !

அடிபணிந்து அவன்பணியும்
ஆசான் திருமாலன் !

அஷ்ட நாகம் அணிகலனாய் பூணும் வேத ரூபன் !
இஷ்டமுடன் வேண்டுவோர்க்கு அருளுகின்ற நாதன் !

(கல் கருடன்)