தேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்

தேய்பிறை அஷ்டமி - ஸ்ரீ கால பைரவர் பாடல்
Youtube-ல் கேட்க… அடுத்த பைரவர் பாடல்… அஷ்டமி திருநாளில் இஷ்டமாய் உனைவேண்ட… கஷ்டங்கள் தீருமே ! கால பைரவனே ! ஈஸ்வரன் சனி பகவான் போற்றிடும் குருவே ! வேண்டிய வரமருளும் கற்பகத் தருவே ! (கோரஸ்) கால பைரவா ! சரணம் ! சரணம் ! காத்து அருளுவாய் ! சரணம் ! அஷ்டம சனி என்ன? ஏழரை சனி என்ன? அஷ்டமி வழிபாட்டால் நல்லதே நடக்கும் ! (2) பஞ்ச தீபமும் ஏற்றினோம் சன்னதியில்… நெஞ்சின் குறை நீங்கி சேர்ந்தது நிம்மதியே ! (2) (கோரஸ்) கால பைரவா ! சரணம் ! சரணம் ! காத்து அருளுவாய் ! சரணம் ! காலனின் பயமில்லை ! யாருக்கும் பயமில்லை ! நீல மேனியனே ! உந்தன் துணையாலே ! (2) செவ்வாடை சார்த்தியே செவ்வரளிப் பூவாலே… தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்திடுவோம்! (2) (கோரஸ்) கால பைரவா ! சரணம் ! சரணம் ! காத்து அருளுவாய் ! சரணம் !