ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ! ஜெய் லட்சுமி நரசிம்மா !

ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ! ஜெய் லட்சுமி நரசிம்மா !
Download Mp3 audio (right click and select “Save Link as” or “Save Target as”) மலோலன் மாதவன் மோகனன் ! கோபாலன் கேசவன் கோகுலன் ! சிம்மமென வந்தவனாம் ! நம்மைதினம் காப்பவனாம் ! ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனாம் ! ஹரிஹரபுரம் ஆள்பவனாம் ! (மலோலன்) சித்திரையில் சுவாதியிலே… இத்தரையில் தோன்றியவன் ! பக்தரெலாம் பரவசமாய்.. பணிந்தேற்றும் பரந்தாமன் ! கூப்பிடுவார் குரல்கேட்டு குறைதீர்த்து அருளுபவன் ! மன இருளை நீக்கிடுமோர் திருவிளக்காய் ஒளிருபவன் ! (மலோலன்) பூஞ்சோலைப் பூத்ததையே பார்த்ததுபோல் ஆனந்தமே ! வாஞ்சையுடன் சிம்மனையே.. பார்த்திருக்கும் பொழுதுஎலாம் ! கர்ஜனையில் நமைச்சூழும் கர்மவினை பொடித்திடுவான் ! அர்ச்சனைகள் செய்வோர்க்கு… ஐஸ்வர்யம் சேர்த்திடுவான் ! (மலோலன்)