ஸ்ரீ ரமண மகரிஷி – பாடல் (68-ஆவது ஆராதனை நாள்)

ஸ்ரீ ரமண மகரிஷி - பாடல் (68-ஆவது ஆராதனை நாள்)

ஏதோ ஒரு பாட்டு (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
———————————————–

பாடலைக் கேட்க…

‘யார்நான்’ எனும் கேள்வி அதன் பதிலைத் தேடி…
சேர்ந்தாயே பார்போற்றும் அண்ணா மலையினடி…! (2)
உன் கண்களின் ஒளியினிலே மன இருளது நீங்கிடுமே !
உன் பண்களைப் பாடிடவே திரு வருளது ஓங்கிடுமே !
அருணைமலை குருரமணா ! கருணைமழை குருரமணா !
பொறுமைநிலை திருவதனா ! சரணம் ஹர சிவ சுதனா !

(‘யார்நான்’ )

அறியா வயதினிலே பரம்பொருள் அறிந்தவனே !
புரியா வேதாந்தம் புரிந்தே தெளிந்தவனே !
தவவடிவேந்தி சிவனுடன் குகையில் பலநாள் இருந்தவனே !
ஞான ரமணனே ! உந்தன் நாமம் வேதமே !
மோன ரூபனே ! உந்தன்..பாதம் சரணமே !

(‘யார்நான்’ )

காகம், மயில் கூட மோட்சம் அடைந்ததுவே !
யாவும் உன்னாலே ஜென்மம் கடந்ததுவே !
அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! என்னும் மந்திரமே..
என்றும் நெஞ்சிலே ஒலித்தாய் அருணை ரமணனே !
கருணை மழையினை எங்கும் பொழியும் வருணனே !

(‘யார்நான்’ )