சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

இந்த இணைப்பில் உள்ள பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன். மேலும், 2 நாமாவளிகளுக்கு பொருள் விளங்கவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால், சேர்த்துக்கொள்கிறேன்.

“இது ஆர்வமிகுதியில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாகும். Nothing official about it !” – ஸ்ரீதேவிபிரசாத்

#periyava #namavali

1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியே போற்றி !
2. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி குருவே போற்றி !
3. சன்னியாசத்தின் சிகரமே போற்றி !
4. காவியும் தண்டமும் கொண்டவா போற்றி !
5. பீடைகள் எல்லாம் தீர்ப்பவரே போற்றி !
6. சுவாமிநாத குருவே போற்றி !
7. கருணையின் கடலே போற்றி !
8. சகமெலாம் கவரும் சக்தியே போற்றி !
9. அண்ட சராசர உயிர் நாடியே போற்றி !
10. பக்தர் நலம் காக்கும் மேலோய் போற்றி !
11. தர்ம வழி காப்பவனே போற்றி !
12. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் ஆச்சார்யரே போற்றி !
13. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பூஜிப்பவரே போற்றி !
14. சிவ சக்தி வடிவானவரே போற்றி !
15. பக்தர்கள் மனம் விரும்பும் குருவே போற்றி !
16. சிவ, விஷ்ணு, ப்ரம்ம ரூபனே போற்றி !
17. காஞ்சி தல‌ வாசனே போற்றி !
18. கைலாச மலை வாசனே போற்றி !
19. தர்மவழி வளர்ப்பவனே போற்றி !
20. நால்வகை மானிடர் காவலரே போற்றி ! (Brahmins, Kshatriyas, Vaishyas, Shudras)
21. அகிலம் காக்கும் பிரமாணம் கொண்டவரே போற்றி !
22. ப்ரம்ம ஞானத்தைத் தருபவரே போற்றி !
23. பாவமெலாம் தீர்ப்பவனே போற்றி !
24. தர்மம் காப்பதில் த்ருப்தி கொள்பவரே போற்றி !
25. பக்தர்கள் அளிப்பதை ஏற்றருள்பவரே போற்றி !
26. உபநிஷதங்களின் ஞான சாரமே போற்றி !
27. சாஸ்திரம் அனைத்திலும் விற்பன்னரே போற்றி !
28. அனைத்துலக தந்தையரே போற்றி !
29. பக்தர்கள் வேண்டுதல் தருபவரே போற்றி !
30. ப்ரம்மணீயம் காப்பவரே போற்றி !
31. அனேக புஷ்பங்கள் பூஜிக்கும் பதம் கொண்டவரே போற்றி !
32. ருத்ராட்ச க்ரீடம் தரித்தவரே போற்றி !
33. திருநீறு பூசியவா போற்றி !
34. அனைத்தும் அறிந்தவரே போற்றி !
35. அண்ட சராசரமெலாம் நிறைந்தவரே போற்றி !
36. அனேக சிஷ்யர்களை வழி நடத்துபவரே போற்றி !
37. மன சஞ்சலம் தீர்ப்பவரே போற்றி !
38. அபயம் தரும் கரத்தோரே போற்றி !
39. அச்சம் தீர்ப்பவரே போற்றி !
40. யாக புருஷரே போற்றி !
41. யாக அனுஷ்டான நெறியாளரே போற்றி !
42. யாக விற்பன்னரே போற்றி !
43. யாகம் செய்ய உதவிடுவோய் போற்றி !
44. யாக பலன் தருபவரே போற்றி !
45. யாகம் விரும்புபவரே போற்றி !
46. நிகரற்றவரே போற்றி !
47. ஸ்படிக துளசி மாலை தரித்தவரே போற்றி !
48. நால்வகை மானிடரை சமமாய் மதிப்பவரே போற்றி !
49. நான்மறை காக்கும் காவலரே போற்றி !
50. தட்சிணாமூர்த்தி வடிவானவரே போற்றி !
51. —
52. கோடி சூரியனின் ஒளிமயமானவரே போற்றி !
53. சாதுக்கள் சபையின் காவலரே போற்றி !
54. யானை, பரி, கோ பூஜை செய்தவரே போற்றி !
55. முடிவிலா குருபாத பூஜை செய்தவரே போற்றி !
56. கனகாபிஷேகம் கண்டவரே போற்றி !
57. பொன் வில்வ இலையாலே பூஜித்தவரே போற்றி !
58. அனைத்து ஜீவராசிக்கும் மோட்சம் அளிப்பவரே போற்றி !
59. ஊமையையும் பேசவைப்பவே போற்றி !
60. முக்காலம் அறிந்தவரே போற்றி ! (தீர்க்கமான பார்வை கொண்டவரே)
61. பன்னிரு லிங்கம் நிறுவியவரே போற்றி !
62. கான ரசம் கொண்டவரே போற்றி !
63. ப்ரம்ம ஞானம் உபதேசிப்பவரே போற்றி !
64. அனைத்து கலைகளும் அருள்பவரே போற்றி !
65. நால்வகை மானிடரும் பூஜிப்பவரே போற்றி !
66. மொழி பல அறிந்து பேசும் வல்லவரே போற்றி !
67. எட்டுவகை சித்திகளும் தருபவரே போற்றி !
68. ஸ்ரீ சாரதா மடத்திற்கும் நன்னிலை தந்தவரே போற்றி !
69. நித்ய அன்னதானப் ப்ரியரே போற்றி !
70. தொழுதிட எளியோரே போற்றி !
71. பாத யாத்திரை ப்ரியரே போற்றி !
72. அனேக மதநெறியின் பண்டிதரே போற்றி !
73. வேத சாஸ்திர இதிகாச ஞானியே போற்றி !
74. தேவரும் யட்சரும், கிங்கரரும் பூஜிப்பவரே போற்றி !
75. —
76. பார்வையில் இன்பம் அருள்பவரே போற்றி !
77. அத்வைத தத்துவ பொருளே போற்றி !
78. எளிமைமிகும் கருணாமூர்த்தியே போற்றி !
79. சைவரும், வைஷ்ணவரும் துதிப்பவரே போற்றி !
80. சங்கராச்சார்யரே போற்றி !
81. தண்டமும், கமண்டலமும் தரித்தவரே போற்றி !
82. (வீணை, மிருதங்கம் போன்ற) இசை வாத்ய நாத வடிவானவரே போற்றி !
83. ஸ்ரீராமர் கதை ரசிப்பவரே போற்றி !
84. வேதம், ஆகம சாஸ்திர, கலைகள் அனைத்திற்கும் மூலமானவரே போற்றி !
85. இதயத்தில் உறைபவரே போற்றி !
86. ருத்ரம் நூறும் துதிபாடும் பொருளே போற்றி !
87. கேதார ஈஸ்வரனின் வடிவே போற்றி !
88. அறியாமை இருளகற்றும் ஒளியே போற்றி !
89. தன்னல மில்லா சேவை செய்திடச் சொன்னவரே போற்றி !
90. எளிய பக்தி மார்க்கம் உபதேசம் செய்தவரே போற்றி !
91. லிங்க வடிவானவரே போற்றி !
92. சாளக்கிராமத்தின் சூட்சம வடிவானவரே போற்றி !
93. காலடியில் சங்கரரின் புகழினை தூக்கி நிறுத்தியவரே போற்றி !
94. புலன்களை அடக்கியவரே போற்றி !
95. சரணடைந்தவரைக் காப்பவரே போற்றி !
96. ஸ்ரீசைல மலை வாசனே போற்றி !
97. உடுக்கை ஒலி ஒலிப்போரே போற்றி !
98. ரிஷப வாகனனே போற்றி !
99. வெறுப்புகள் அறுப்பவரே போற்றி !
100. பில்லி சூன்ய தோஷம் தீர்ப்பவரே போற்றி !
101. சிறிதே உண்பவரே போற்றி !
102. பிறப்பறக்கும் பரம்பொருளே போற்றி !
103. ஸ்ரீசக்ர பூஜையையே பணியாய் கொண்டவரே போற்றி !
104. அடியவர்க்கருள்பவரே போற்றி !
105. அனுஷ நட்சத்திர நாயகரே போற்றி !
106. அகிலமெலாம் போற்றும் சீலரே போற்றி !
107. ஸ்ரீ வேங்கடேச பதமலர் தொழுவோரே போற்றி !
108. ஸ்ரீ த்ரிபுர சுந்தரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் பூஜை ப்ரியரே போற்றி !