ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா – ஸ்ரத்தாஞ்சலி

ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா - ஸ்ரத்தாஞ்சலி

கல்ப வ்ருட்சமாம் காஞ்சியின் மாமுனி !
கழலடி நிழலாய் வந்த பேரொளி !
தர்ம சாஸ்திரம், நான்மறை சொல்படி
தரணியில் வாழ்ந்தஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி !

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !
ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

ஆதி சங்கரர் நிறுவிய ஸ்தாபனம் !
மஹா பெரியவா அருளிய ஸ்ரீமடம் !
ஜோதி விரிந்தது புவியினில் நாற்புறம் !
ஒளியினைத் தந்தஸ்ரீ ஜெயேந்த்ரர் அருட்கரம் !

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !
ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

பாட சாலைகள் திறந்தன புதிதாய்..
வேத கோஷங்கள் கலந்தது காற்றாய்.
தேக நலனைக் காத்திடும் வழியாய்
மருத்துவ மனைகள் வந்தன பெரிதாய் !

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !
ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !

ஞான ரூபமாம் ஸ்வாமிகள் திருமுகம்
நெஞ்சை நீங்குமோ ஆண்டுகள் ஆயினும்..
ஞாலம் போற்றிடும் ஸ்ரீகுரு திருப்பதம் !
நாளும் பாடுவோம் சர்வமும் சங்கரம் !

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !
ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக !