குரு பகவான் கவசம் – தமிழில்

குரு பகவான் கவசம் - தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத்

Youtube link

அனைத்தையும் அறிந்த ஞானியே ! குருவே !
விரும்பிடும் பலன் தரும் அமைதியின் உருவே!
ருத்ராட்சம் அணியும் ப்ரஹஸ்பதி தேவே !
தேவர்கள் வணங்கும் தேவனே ! போற்றி !

சிரத்தினை ப்ரஹஸ்பதி சிறப்புடன் காக்க !
நெற்றியை ஸ்ரீகுரு நலமுடன் காக்க !
வரம் தருவோனென் கண்களைக் காக்க !
தேவரின் ஆசான் செவிகளைக் காக்க !

மறைகளை உணர்ந்தோன் நாசியை காக்க !
அனைத்தையும் அறிந்தோன் வாய்தனை காக்க !
தேவரின் குருஎன் நாவினை காக்க !
தெய்வங்கள் குரு என் தொண்டையை காக்க !

நலங்களைத் தருவோன் கரங்களை காக்க !
புஜங்களை பலமுடன் வாங்கீரசன் காக்க !
மார்பை என்றும் வாகீசன் காக்க !
மங்கல வடிவினன் வயிற்றினை காக்க !

சுகமளிப்போன் என் நடுவுடல் காக்க !
ஸ்ரீ குரு எந்தன் நாபியை காக்க !
ஜகமெலாம் தொழுவோன் இடையினை காக்க !
வாக்கின் அதிபதி தொடைகளை காக்க !

விஷ்வாத்மகஸ்ததன்  பதங்களை காக்க !
தேவர் ஆச்சாரியன் மூட்டுகள் காக்க !
என்னுடல் ஏனைய அங்கங்கள் யாவும்
அனைத்திற்கும் குருவாம் அவனே காக்க !

அனுதினம் மும்முறை… ப்ரஹஸ்பதி கவசம்
துதித்தால் நினைத்த காரியம் நடக்கும்…
குருவின் அருளும் பூரணமாகும் !
என்றும் எதிலும் ஜெயமென ஆகும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *