அகவல் சொன்னால்…

அகவல் சொன்னால்...

பாடலைக் கேட்க
ஔவைப் பாட்டி அருளிய ஸ்ரீ விநாயகர் அகவலின் பெருமைகளை சொல்லும் பாடல்
************

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !

(அகவல்)
சுந்தரத்துச் செந்தமிழில் அவ்வைப் பாட்டி சொன்னது – அதன்
சந்தத்திலே ஆனைமுகன் சிந்தையெலாம் குளிர்ந்தது !
அவ்வையினைக் கயிலை மலை அழைத்துக் கொண்டு சென்றது !
எவ்விதத்துத் தோஷத்தையும் நிவர்த்தி செய்ய வல்லது !
(அகவல்)

எழுபத்திரு அடிகளிலும் பக்தி மணம் கமழ்வது ! – நல்ல‌
ஏற்றம் தரும் வாழ்வுக்கான தத்துவங்கள் கொண்டது !
பிள்ளையாரே பாடச்சொல்லி தலையசைத்துக் கேட்டது !
எல்லையில்லா ஆனந்தத்தை என்றும் அளிக்க வல்லது !
(அகவல்)

1 Comment

Comments are closed.