அபார கருணை கொண்ட பைரவா !

அபார கருணை கொண்ட பைரவா !

Youtube-ல் கேட்க

அபார கருணை கொண்ட பைரவா ! – உன்
அருள் மழையில் நனையவைப்பாய் பைரவா ! (2)
குபேர செல்வம் தரும் பைரவா !(2)  – ஒரு
குறையுமிலா வாழ்வருள்வாய் பைரவா ! பைரவா !

கோரஸ்:
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவா போற்றி !
செல்வம் தந்தருளும் தெய்வமே போற்றி ! (2)

பிள்ளைச் செல்வம் கேட்டவர்க்கு நல்ல வரம் அளிப்பவா !
பில்லி சூனியங்கள் இல்லை என செய்பவா ! (2)

அள்ளி அள்ளித் தந்திடும் வள்ளல் குணம் கொண்டவா !
வெள்ளை மனம் கொண்டவனே வெற்றி தரும் பைரவா !

(ஸ்வர்ண)

அஷ்டமியில் அடிபணிந்தால் கஷ்டங்களை தீர்ப்பவா !
நஷ்ட தொழிலிலும் லாபமுறச் செய்பவா ! (2)

வடகிழக்கு மூலையில் வாஞ்சையுடன் நின்றவா !
தடைவிலக்கித் தருபவனே ! தர்மவானே பைரவா !

(ஸ்வர்ண)