ஸ்ரீ அன்னையும் மலர்களும்

ஸ்ரீ அன்னையும் மலர்களும்

மலரே ! மலரே ! கேளாயோ?
மலர் போல் மனம் கொண்ட அன்னையை சேராயோ? (2)
கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ? – என்
கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ?….

(மலரே ! மலரே!)
வெள்ளைத் தாமரையே ! அன்னையின் பதம் சேரு !
உள்ளத்தில் தெய்வீகம் மேம்படும் வரம் கேளு ! (2)
வெள்ளை  ரோஜாவே ! அன்னையின் பதம் சேரு !
அச்சம் இல்லாத வீர திறன் கேளு ! (2)

(மலரே மலரே)

மல்லிகைப் பூவே ! மனதில் திடம் கேளு !
மகிழம் பூவே ! (நல்) மாற்றங்கள் தனைக் கேளு ! (2)
மனோ ரஞ்சிதமே ! தெளிந்த மனம் கேளு !
மணக்கும் செண்பகமே ! மனநிறைவ தைக் கேளு ! (2)

(மலரே மலரே)