ஸ்ரீ குருவே போற்றி ! 

ஸ்ரீ குருவே போற்றி ! 

பாடலை Youtube -ல் கேட்க

 
 
ஆல மரத்தடியில் பழுத்த ஞானப்பழம் !
நீலகண்டன் சிவபெருமான் திருஅவதாரம் !
தட்சிணாமூர்த்தி எனும் தென்முகக் கோலம்…
தரிசனம் கண்டுதினம் தொழுதிடுவோம் !
 
ஸ்ரீ குருவே போற்றி !
சிவ உருவே போற்றி !

முயலகன் என்னும்நம் அஞ்ஞானம்..- அதை
முற்றிலும் அகற்றிஅவன் தருவான் மெய்ஞானம்..!
மண்ணில் முதன்முதலாய் வந்த ஆசிரியன் !
மங்கல மஞ்சள்நிற ஆடைப் ப்ரியன்  !

ஸ்ரீ குருவே போற்றி !
சிவ உருவே போற்றி !

சின்மய முத்திரையைக் காட்டியதில்…- அந்த
சனகாதி முனிவர்களின் ஐயங்கள் தீர்த்தவன் !
தெள்ளிய சிந்தனைகள் தந்திடும் ஞான குரு!
திவ்விய தியான நிலை மோன குரு !

ஸ்ரீ குருவே போற்றி !
சிவ உருவே போற்றி !