அத்தி வரதர்

அத்தி வரதர்
நான்முகன் ப்ரம்மன் செய்யும் வேள்விக்கு அழைத்திட வில்லை ‘ஏன்?’என சரஸ்வதி தேவி பொங்கினள் கோபம் கொண்டே ! தானொரு நதியாய் மாறி வேள்வியைக் கலைத்திட வந்தாள் ! திருவுளம் கொண்டவர் திருமால் தீயினில் இருந்தே தோன்றி வருகிற நதியைத் தடுக்கும் அணையென சயனம் கொண்டார் ! வெள்ளமாய் வந்தவள் அங்கே வெட்கியே தடமும் மாறி உள்ளமும் மாறிட அங்கே வேள்வியும் முடிந்தது நன்றாய் ! தனக்கென அணையாய் வந்து தன்னையும் அரணாய் காத்த குணமிகு வரதன் தன்னைத் தொழுதுபின் ப்ரம்மன் அவனும் வனமெனும் அத்தி வனத்தின் மரத்தினில் திருமால் சிலையை மனம்கவர் விதமாய் செய்தான் ! மண்ணிலே வரதன் வந்தான் !