சாய் பாபா கீர்த்தனை

சாய் பாபா கீர்த்தனை

ராகம்: சிவரஞ்சனி

தாளம்: ஆதி

பாடலை Youtube-ல் கேட்க

பல்லவி
—————–
சாய் பகவானே சௌபாக்யம் தருவான்…
சதா அவன் நாமம் ஜபி மனமே !

அனுபல்லவி
———————–
தாயாய், தந்தையாய், குருவாய் ஆனவன் !
பரம தயாளன், ஷீரடி தல வாசன் !

சரணம்
—————
அடைக்கலம் என்றார்க்கு ‘அஞ்சேல்’ என்றருள்வான் !
‘பயமிலை’ எனச்சொல்லி அபயக்கரம் தருவான் !
இடராய், இன்னலாய் எதிரென்ன தோன்றினும்..
தடையுடைத்திடுவான்..நல்வழி காட்டிடுவான் !