சிங்கத்தில் வரும் அங்காளி !

சிங்கத்தில் வரும் அங்காளி !

குங்குமத்து பொட்டுக்காரி

கோவக்காரி !

தஞ்சமுன்னு வந்துபுட்டா

வேற மாறி…! (2)

தானாய் வந்தவளாம்…!

தாயாய் காப்பவளாம்…! (2)

அங்காளி தேவியளாம்..!

செங்காளி பைரவியாம்..!

வெள்ள மனம் உள்ளவளாம்..

தில்லை வனத்தவளாம் ! (2)

(ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா

பவனி வருகிறா…!

செம்பவள சித்திரமாம்

முத்து மாரி !

செம்படவர் ரத்தினமாம்

சக்தி தாயி !(2)

ஆத்தா..! மாரியம்மா !

பூத்தா..! தீமுகமா…!(2)

செல்லாயி ராணியம்மா !

மல்லார்ந்த தேவியம்மா !

நல்ல தெல்லாம் தந்தி டுவா !

நர்த்தன நாயகியாம் ! (2)

(ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா

பவனி வருகிறா…!

மஞ்சள் நிறம் கொஞ்சிடுவா

மலைய னூரி..!

பஞ்சமின்றி தந்திடுவா..

பர மேஸ்வரி ! (2)

மாசித் தேரிழுத்தா…

பாசம் காட்டிடுவா !…(2)

மஞ்சம்மா தேவியளாம் !

மகராசி ஆனவளாம் !

நெஞ்ச மெல்லாம் நின்னு ருப்பா..

மந்திர சுந்தரியாம் ! ! (2)

(ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா

பவனி வருகிறா…!

தக்கன் தல‌ சாய்ச்சவளாம்

தாட்சா யிணி!

பக்க பலம் ஆகிடுவா

இருளா யினி ! ! (2)

தீய மிதிக்கையில..

பூவா மாத்திடுவா…! (2)

அவதார நாயகியாம் !

அங்காள ஈஸ்வரியாம் !

தன்னா னனே சந்தம் ஆடி

வந்திடும் காளியளாம் ! (2)

(ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா

பவனி வருகிறா…!

பம்பசத்தம் கேட்டுபுட்டா

பத்ர காளி !

நம்ப பக்கம் நின்னுடுவா..

நல்ல‌ தாகி ! (2)

சூர…ஆடிடுவா !

ஊர..காத்திடுவா ! (2)

பண்பான நாயகியாம் !

தாயான பார்வதியாம் !

அன்புடனே அம்மா என்றால்

வந்திடும் தேவியளாம் ! (2)

(ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா

பவனி வருகிறா…!