அங்காளம்மன்

சிங்கத்தில் வரும் அங்காளி !

குங்குமத்து பொட்டுக்காரி கோவக்காரி ! தஞ்சமுன்னு வந்துபுட்டா வேற மாறி…! (2) தானாய் வந்தவளாம்…! தாயாய் காப்பவளாம்…! (2) அங்காளி தேவியளாம்..! செங்காளி பைரவியாம்..! வெள்ள மனம் உள்ளவளாம்.. தில்லை வனத்தவளாம் ! (2) (ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா பவனி வருகிறா…! செம்பவள சித்திரமாம் முத்து மாரி ! செம்படவர் ரத்தினமாம் சக்தி தாயி !(2) ஆத்தா..! மாரியம்மா ! பூத்தா..! தீமுகமா…!(2) செல்லாயி ராணியம்மா ! மல்லார்ந்த தேவியம்மா ! நல்ல தெல்லாம் தந்தி டுவா ! நர்த்தன நாயகியாம் ! (2) (ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா பவனி வருகிறா…! மஞ்சள் நிறம் கொஞ்சிடுவா மலைய னூரி..!