பாபா சொன்ன அன்னதானம் !

பாபா சொன்ன அன்னதானம் !

பாடலைக் கேட்க…

பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்
புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் ! (2)

ஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் ! (2)

பொறுமை என்னும் நிதானம் அதுவும்…
பசியினைப் போக்கும் அன்னதானமும்…

கோரஸ்:
தானங்களிலே ப்ரதானம் ! – நம்
பாபா சொன்ன அன்னதானம் ! (2)

(பசிக்கிற‌)
சரணம் – 1
——————–விதியின் வலியால் உணவு இன்றியே
வருந்தி வாடிடு வோர்க்கு… (2)
உவந்து அளிப்பதால் உள்ளம் குளிர்ந்தவர்
வாழ்த்து சொல்லிடும் போது…(2)

அந்த வாழ்த்தில் வாழும் நம் சந்ததி யாவும்…
சாயிநாதனின் ஆசியும் சேரும் !

கோரஸ்:
தானங்களிலே ப்ரதானம் ! – நம்
பாபா சொன்ன அன்னதானம் ! (2)(பசிக்கிற‌ )

சரணம் – 2
————————தனது கையினால் உணவு சமைத்துநம்பாபா வழங்கிய போது…(2)
மனது நிறைந்ததும் மகிழ்ச்சி கொண்டதும் கேட்டு அறிந்திடும் போது…(2)
அவர் செய்துகாட்டிய பணியைநாமெல்லாம் தொடர வேண்டும் அன்றோ?
கோரஸ்:
தானங்களிலே ப்ரதானம் ! – நம்
பாபா சொன்ன அன்னதானம் ! (2)

(பசிக்கிற‌)