பாபா 100

பாபா 100
FACEBOOK பதிவில் பார்க்க/கேட்க: இங்கே… பாடலை யூட்யூப் சேனலில் பார்க்க/கேட்க‌: இங்கே… —————————- நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா ! மாறாத அருள் மட்டும் பாபா ! – உன் மாறாத அருள் மட்டும் பாபா ! – மண்ணில் எந்நாளும் நிலைத்தாளும் பாபா ! மண்ணில் எந்நாளும் நிலைத்தாளும் பாபா ! (நூறாண்டு ஆனதே) நான் மறைந்த பின்னாலும், எந்தன் சமாதி பேசும் என்றாயே காண்கின்றோம் அது சத்தியம் ! (2) படமாக உனைவைத்து தினம் பூஜை செய்தாலும் (2) உடன் வந்து துணையாவாய் இது நிச்சயம் ! (2) (நூறாண்டு ஆனதே) தீராத நோய் தீர்க்க ஓயாமல் நீவளர்த்த தீயாலே வரும்உதியே மருந்தாகுமே ! – உன் துனியாலே வரும்உதியே மருந்தாகுமே ! கூறாத பொன்மொழியா? நீசொன்ன இன்மொழிகள் இப்போது கேட்டாலும் விருந்தாகுமே ! – அவை எப்போது கேட்டாலும் விருந்தாகுமே ! ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் ! ஷீரடி குருசாயி ஜெய சாயிராம் ! (2)