விதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க !

tirupattur-brahma

திருப்பம் தந்து வாழவைக்கும்
திருப்பட்டூர் வாங்க! – மன

விருப்பங்களை தந்தருளும்
வள்ளலினைக் காண…! (2)

சிலை வடிவாய் ப்ரம்ம தேவன் வாழும் ஆலயம் ! – நம்
தலை எழுத்தை மாற்றுகின்ற மகிமை அதிசயம் ! (2)

(திருப்பம் தந்து)

சரணம் – 1

ப்ரம்மனவன் பரமன் பதம் பணிந்த ஆலயம் !

ப்ரம்மபுரி ஈஸ்வரனாய் சிவன் அருளும் ஆலயம் ! (2)

ப்ரம்ம தீர்த்தம் புண்ணியங்கள் சேர்க்கும் ஆலயம் ! – மன

நிம்மதியை நமக்கருளும் ப்ரம்மன் ஆலயம் ! (2)

(திருப்பம் தந்து)

சரணம் – 2

யோக குரு பதஞ்சலிமுனி வாழும் ஆலயம் !
ப்ரம்ம சம்பத் கௌரியவள் அருள் புரியும் ஆலயம் ! (2)

ரோகங்களை நிவர்த்தி செய்து காக்கும் ஆலயம் ! – உள்ளச்
சோகங்களைத் தீர்த்தருளும் ப்ரம்மன் ஆலயம் ! (2)

(திருப்பம் தந்து)