இதோ ஞான சூரியன் !

இதோ ஞான சூரியன் !

அதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில்
———————————————-

இதோ ஞான சூரியன்..! இதோ மோன சந்திரன்..! இங்கே !
இதோ காஞ்சி நாயகன்…! இதோ காசி சங்கரன்…! இங்கே !
கண்ணோடு..கருணையின் கடல் பார்த்தேன்..!
நெஞ்சோடு…அமைதியின் அலை பூத்தேன்…நான்..நான்.

(இதோ ஞான சூரியன்)

கமல பாதம் நடையினில் கனிந்து போகும் !
நிமல ரூபம் அதில்தடை தணிந்து போகும் !
வேதம் சொன்ன பாதையே மார்க்க மாகுமே !
வாழ்த்து அருள வாழ்க்கையே தீர்க்க மாகுமே !

கயிலை நாதன் ஈசனை..கண்ணில் கண்ட பாக்கியம்…!
காண நானும் நேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்…!

(இதோ ஞான சூரியன்)